ATA Virtual Convention-2021
Competitions
General Competition rules:
- Registration is restricted to currently active ATA-Member Schools.
- Maximum entries per category are based on the total students in a school.
- Maximum two entries per category for schools having the strength of up to 200 students.
- Maximum three entries per category for schools having 201 to 300 total students
- Maximum four entries per category for schools having more than 300 students
- School Admins must submit the Registration Form by November 1, 2021
-
- Age calculation is as of August 31, 2021. Please see the two examples below for age calculation.
- Example 1 – DOB: August 30, 2012- Age 8
- Example 2 – DOB: August 31, 2012- Age 9
- If there are multiple entries for the same student, the latest entry by the deadline will be considered.
- No student should compete in more than 2 categories
- The Judges’ decisions are final.
- All submissions will be considered as the exclusive property of the American Tamil Academy, ATA. Contestants agree to waive the Copyright for their submissions. ATA reserves the right to use as determined by the board.
Entry to Competition:
- Contestants should submit the video recording/Drawings/ Essay/ Kavithai according to their Competition and category using the link given in the registration form(School Admin) on or before November 1, 2021.
- Contestants are not allowed to refer to any material during the recordings.
- Finalists will be announced in advance for each category.
On the day of the Competition:
- Finalists should be available to present through zoom on December 11, 2021, and December 12, 2021.
- Winners will be selected based on their final performance.
- The judges’ decisions are final.
Rewards and Prizes:
- Cash prizes will be awarded to selected winners.
- Certificates will be provided to all participants.
Queries:
All queries should be emailed to convention2021@americantamilacademy.org
போட்டி விவரங்கள்:
போட்டிகள் | பிரிவு | வயது ( August 31, 2021 அன்று) | விவரங்கள் |
மாறுவேடப் போட்டி | பிரிவு 1 | 6 வயது வரை | மாறுவேடப் போட்டி – 2021 |
சுட்டிகளின் குட்டிக் கதை | பிரிவு 1 | 6 வயது வரை | சுட்டிகளின் குட்டிக் கதை-2021 |
செய்யுள் போட்டி | பிரிவு 1 | 7-8 | செய்யுள் போட்டி – 2021 |
பிரிவு 2 | 9-10 | ||
பேச்சு போட்டி | பிரிவு 1 | 8-10 | பேச்சு போட்டி – 2021 |
பிரிவு 2 | 11-14 | ||
பிரிவு 3 | ஆசிரியர்களுக்கு மட்டும் | ||
கவிதைப் போட்டி | பிரிவு 1 | 13-18 | கவிதைப் போட்டி – 2021 |
பிரிவு 2 | ஆசிரியர்களுக்கு மட்டும் | ||
கட்டுரைப் போட்டி | பிரிவு 1 | 13-18 | கட்டுரைப் போட்டி – 2021 |
ஓவியப் போட்டி | பிரிவு 1 | 5-7 | ஓவியப் போட்டி – 2021 |
பிரிவு 2 | 8-11 | ||
பிரிவு 3 | 12-14 | ||
சிறுகதைப் போட்டி | பிரிவு 1 | ஆசிரியர்களுக்கு மட்டும் | சிறுகதைப் போட்டி – 2021 |
மாறுவேடப் போட்டி – 2021
மாறுவேடப் போட்டி:
போட்டிக்கான வயது :அதிகபட்ச வயது ஆறு; அம்மா அல்லது அப்பாவோடு சேர்ந்து
போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
பொது விதிகள் :
- குழந்தைகளோடு பெற்றோர்களும் மாறுவேடம் அணிய வேண்டும்.
- அதிகபட்சமாக இரண்டு நிமிடத்திற்கு உரையாடல் இருக்க வேண்டும்.
- வேடத்திற்கு ஏற்றார்போல் உரையாடல் அமைய வேண்டும்.
- கண்டிப்பாகப் பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
- ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம்.
- நேரத்தைச் சரியாக பயன்படுத்துதல்.
- வேடத்திற்கு ஏற்றார்போல் உரையாடல்.
- உடல் மொழி (body language).
சுட்டிகளின் குட்டிக் கதை – 2021
சுட்டிகளின் குட்டிக் கதை:
போட்டிக்கான வயது :அதிகபட்ச வயது ஆறு;
தலைப்பு: நீதிக் கதைகள்
பொது விதிகள் :
- கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் கதை சொல்ல வேண்டும்.
- பிறமொழி சொற்களை தவிர்த்தல் வேண்டும்.
- கண்டிப்பாகப் பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது
தேர்ந்தெடுக்கும் முறை :
- கதையை முழுமையாக கூறுதல்.
- நேரத்தைச் சரியாக பயன்படுத்துதல்.
- உடல் மொழி (body language).
செய்யுள் போட்டி – 2021
செய்யுள் போட்டி 1:
தலைப்பு: நாமக்கல் கவிஞர் பாடல் அல்லது நாலடியார் பாடல்.
போட்டிக்கான வயது :7- 8
- ஏதேனும் ஒரு நாமக்கல் கவிஞர் பாடல் அல்லது நாலடியார் பாடலை தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்த பாடலை பாடியோ அல்லது பேசியோ அதன் விளக்கத்தை பதிவு செய்ய வேண்டும்.
செய்யுள் போட்டி 2:
தலைப்பு: புறநானூற்றுப் பாடல்
போட்டிக்கான வயது :9-10
- புறநானூற்றில் இருந்து ஏதேனும் ஒரு செய்யுளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- தேர்ந்தெடுத்த செய்யுளின் விளக்கத்தைச் சமகால வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பேசி பதிவு செய்ய வேண்டும்.
பொது விதிகள்:
- உங்கள் பதிவுகள் ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- பிறமொழி சொற்களை தவிர்த்தல் வேண்டும்.
- இலக்கை நோக்கிப் பேச்சு இருத்தல் வேண்டும்.
- கண்டிப்பாகப் பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது
தேர்ந்தெடுக்கும் முறை :
- நேரத்தைச் சரியாக பயன்படுத்துதல்.
- சரியான தொடக்கம்.
- தலைப்பை விட்டுத் தவறாத பேச்சு.
- வார்த்தை உச்சரிப்பு.
- தன்னம்பிக்கை உடைய , தடுமாற்றம் இல்லாத பேச்சு.
உடல் மொழி (body language). - உவமைகளைப் பயன்படுத்துதல்.
பேச்சு போட்டி – 2021
மாணவர்களுக்கான தலைப்புகள்:
- கொரோனா கற்றுத் தந்த பாடம்
- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
- தமிழ் எங்கள் மூச்சு
போட்டிக்கான வயது பிரிவு 1 : 8 – 10
போட்டிக்கான வயது பிரிவு 2 : 11 – 14
ஆசிரியர்களுக்கான தலைப்புகள்:
- மனிதனாய் இரு!
- கற்பித்தலின் பரிமாணங்கள்
பொது விதிகள்:
- கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் ஒன்றினை தேர்வு செய்து குறைந்தபட்சம் மூன்று நிமிடங்கள் முதல் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் வரை பேச வேண்டும்.
- பிறமொழி சொற்களை தவிர்த்தல் வேண்டும்.
- இலக்கை நோக்கி பேச்சு இருத்தல் வேண்டும்.
- கண்டிப்பாக பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேரத்தை சரியாக பயன்படுத்துதல்.
- சரியான தொடக்கம்.
- தலைப்பை விட்டு தவறாத பேச்சு.
- வார்த்தை உச்சரிப்பு.
- தன்னம்பிக்கை உடைய, தடுமாற்றம் இல்லாத பேச்சு.
உடல் மொழி (body language). - பழமொழிகள், கவிதைகள் பயன்படுத்துதல்.
கவிதைப் போட்டி – 2021
தலைப்புகள்:
- நீர் இன்றி அமையாது உலகு
- பூமிக்கு ஒரு புது விதி
- ஆதலினால் தமிழ் கற்போம்
போட்டிக்கான வயது :13 – 18
ஆசிரியர்களுக்கான தலைப்புகள்:
- கொரோனாவில் மனிதம்
- தேடும் அறம்…
பொது விதிகள்:
- சொல்ல வரும் கருத்தை கவிதை நடையில் சொல்ல வேண்டும்.
- உங்கள் கவிதை புதுக்கவிதை ஆக இருக்கலாம் மரபுக் கவிதையாக இருக்கலாம்.
- எதுகை மோனையுடன் உங்கள் பேச்சு இருக்க வேண்டும்.
- மூன்றிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் உங்கள் பதிவு இருக்க வேண்டும்.
- பிறமொழி சொற்களை தவிர்த்தல் வேண்டும்.
- கண்டிப்பாக பேச்சில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
- நேரத்தை சரியாக பயன்படுத்துதல்.
- சரியான தொடக்கம்.
- தலைப்பை விட்டு தவறாத பேச்சு.
- வார்த்தை உச்சரிப்பு.
- தன்னம்பிக்கை உடைய , தடுமாற்றம் இல்லாத பேச்சு.
உடல் மொழி (body language). - கவிதை நடையாக இருத்தல்.
கட்டுரைப் போட்டி – 2021
தலைப்பு :
- திருக்குறள் கூறும் வாழ்க்கை நெறி
- எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
- இயற்கை கற்றுக் கொடுக்கும் பாடங்கள்
போட்டிக்கான வயது :13-18
பொது விதிகள்:
- கட்டுரைகள் தமிழில் மட்டுமே இருத்தல் வேண்டும்.
- முன்னுரை, முடிவுரையுடன் கட்டுரை அமைய வேண்டும்.
- உள் தலைப்புகள் இருக்க வேண்டும்.
- பிறரின் கருத்துக்களைப் பார்த்தோ கேட்டோ எழுதுதல் கூடாது.
- 2 முதல் 3 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
- வரிகளின் இடைவெளி 1.5 இருத்தல் வேண்டும்.
- எழுத்து-வெர்டானா; எழுத்துரு அளவு 10 இருத்தல் வேண்டும்
- கண்டிப்பாக எழுத்தில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
- எழுதுகின்ற கருத்து தெளிவாக இருத்தல் வேண்டும்
- தொகுதி உள்ளடக்கம்
- தெளிவாக வடிவமைத்தல்
- தலைப்பை ஒட்டி எழுதுதல்
- சொற்றொடர் கையாடல்
- எழுத்துப்பிழை மற்றும் இலக்கணம்
ஓவியப் போட்டி – 2021
கருப்பொருள்:
என் கனவு பூமி
போட்டிக்கான வயது பிரிவு 1 : 5 – 7
போட்டிக்கான வயது பிரிவு 2 : 8 – 11
போட்டிக்கான வயது பிரிவு 3 : 12 – 14
பொது விதிகள்:
- வரைதல் / ஓவியம் செங்குத்து அல்லது கிடைமட்டமாக இருக்கலாம்.
- உங்கள் தொடர்பு/விளக்கப்படம் 11.7″ X 16.5″ அளவு ஆக இருக்க வேண்டும்.
- உங்கள் படம் பார்வையாளர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும்.
- உங்கள் படம் அல்லது செய்தியை வலியுறுத்த, நீங்கள் அதிகபட்சம் 10 சொற்களைப் பயன்படுத்தலாம்.
- உங்கள் படைப்புகளுக்கு தயவுசெய்து வெள்ளை வண்ண கலை காகிதம் அல்லது விளக்கப்படம் பயன்படுத்தவும்.
- ஓவியத்தின் மீது பெயரையோ அல்லது உங்கள் அடையாளத்தையோ குறிப்பிடக் கூடாது.
- முதல் பக்கத்தில் மாணவரின் பெயர், தொடர்பு மின்னஞ்சல், படைப்பின் கருப்பொருள் எழுத வேண்டும்.
- இரண்டாம் பக்கத்தில் உங்களது ஓவியம் அமைய வேண்டும்.
- இரண்டு பக்கத்தையும் சேர்த்து ஒரு கோப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
- மாணவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
- ஒருவர் ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
- கணினியில் ஓவியம் வரையக் கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
- கருப்பொருள் தெளிவாக இருத்தல்
- விதிகளை பின்பற்றி ஓவிய படைப்பு
- மிகச் சிறந்த அளவு மாறுபாடுகள்
சிறுகதைப் போட்டி – 2021
தலைப்பு:
குழந்தைகளுக்கான கதைகளாக இருக்க வேண்டும்
போட்டிக்கான வயது: ஆசிரியர்களுக்கு மட்டும்
பொது விதிகள்:
- கதைகள் தமிழில் மட்டுமே இருத்தல் வேண்டும்.
- பிறரின் கருத்துக்களைப் பார்த்தோ கேட்டோ எழுதுதல் கூடாது.
- உங்களுடைய கதை 500 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
- வரிகளின் இடைவெளி 1.5 இருத்தல் வேண்டும்.
- எழுத்து-வெர்டானா; எழுத்துரு அளவு 10 இருத்தல் வேண்டும்
- கண்டிப்பாக எழுத்தில் அரசியலோ, மதமோ அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துகளோ இருக்கக்கூடாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
- எழுதுகின்ற கருத்து தெளிவாக இருத்தல் வேண்டும்
- தெளிவாக வடிவமைத்தல்
- தலைப்பை ஒட்டி எழுதுதல்
- சொற்றொடர் கையாடல்
- எழுத்துப்பிழை மற்றும் இலக்கணம்