School Communication
பள்ளிப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.
உங்களில் பலர் விடுமுறையில் இருப்பீர்கள். சிலர் அடுத்த கல்வி ஆண்டிற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இருப்பீர்கள்.
அதே நேரத்தில், அ.த. க வில், புத்தகப்பணிகள் ஓய்வில்லாமல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் முன்னரே அறிவித்தபடி நமது பாடத்திட்டத்தை எளிமைப்படுத்தி திருத்தி அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இதில் எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது பல அமெரிக்க மற்றும் சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழக தமிழ்ப்பேராசிரியர்கள், கலை வல்லுநர்கள் மற்றும் பல தன்னார்வல ஆசிரியர்கள் என ஒரு மாபெரும் அணியே இணைந்து செயல்பட்டு வருகிறது. பணியாற்றும் அனைவரும், இரவு பகல் பாராது, வாரநாட்கள், வார இறுதி நாட்கள் என பாராது தம் பேருழைப்பை நல்கி புத்தகங்களுக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
வரும் கல்வி ஆண்டில் இருந்து முன்மழலை என்றொரு தொடக்க நிலைக்கான பாட புத்தகம் வெளிவர இருக்கிறது என முன்னரே அறிவித்திருந்தோம். இப்புத்தகத்தில் பாடல்கள் மற்றும் படங்களே மிகுந்திருக்கும். நம் பிள்ளைகளை கவரும் வண்ணம் அமையும்.
மழலை முதல் மூன்றாம் நிலை வரை உள்ள புத்தகங்கள் எளிமையாக்கப்பட்டு புதிய பாடத் திட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நான்காம் நிலையிலிருந்து எட்டாம் நிலை வரையிலான புத்தகங்கள் 20 பாடங்களாகக் குறைக்கப்பட்டு அவையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பாடங்கள் முடிந்து, பிழை சரி பார்க்கும் பணியும், படங்கள் வரையும் பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இன்னும் ஓரிரு வாரத்தில் புத்தகங்கள் அச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.
புத்தக ஆணைகள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் ஜூலை இறுதி வாக்கில் திறக்கப்படும். புத்தகங்கள் ஆகஸ்ட் மத்தியில் பள்ளிகளுக்கு கிடைக்குமாறு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
புத்தகங்கள் வாங்க, ஆணைகள் சமர்ப்பிக்க வேண்டிய இணைப்பு, மற்றும் பள்ளிகள் எதிர்பார்க்கும் அனைத்து விவரங்களும் அடங்கிய செய்தி மடல் அடுத்த வார இறுதியில் அனுப்பி வைக்கப்படும்.
நன்றியுடன்,
மேகலை
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்
Recent Comments