Student Competitions 2021 Finalists
வெற்றியாளர்கள் அனைவருக்கும் அ.த.க.வின் இதயம் நிறைந்த வாழ்த்துகள்! Student Competitions 2021 Finalists
Student Competition Details – 2021 @ Virtual Convention
Competition details updated. Student Competitions 2021 @ Virtual Convention
ATA Virtual Convention – December 11 & 12, 2021
அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! வணக்கம், அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention) விவரங்கள் - டிசம்பர்த் திங்கள் 11 மற்றும் 12 சனி மற்றும் ஞாயிறு 1) மாணக்கர் மற்றும் ஆசிரியர் போட்டிகள் 2)நெடுநாள் ஆசிரியர் விருது 3) ஆண்டுவிழா மலர் அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention): டிசம்பர்த் திங்கள் 11 மற்றும் 12 சனி மற்றும் ஞாயிறு சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்ததுபோல அ.த.க-வின் மூன்றாம் ஆண்டுவிழாவினை சென்ற ஆண்டைப் போலவே மீண்டுமொரு மெய்நிகர் விழாவாக எதிர்வரும் டிசம்பர் 11-12 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) நடத்த அ.த.க. [...]
ATA eLearning Tool
வணக்கம், அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், அ.த,க. முன்னர் அறிவிந்திருந்ததுபோல, ஆசிரியர்-மாணாக்கர் அனைவரும் இணையவழியில் இணைந்து ஈடுபாட்டுடன் பயிற்றுவிக்கவும்-பயிலவும் ஏதுவாக மழலை மற்றும் நிலை ஒன்றிற்குரிய பாட மற்றும் பயிற்சிப் புத்தகங்களின் பாடங்கள் அனைத்தும் கீழ்க்காணும் இணையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் இணையவழிக் கற்றல் - AmericanTamileLearning : http://ata-atel.org/ இணையப் பக்கத்தின் அடிப்பாகத்தில் இணையவழிk கல்வியில் இணைவதற்கான வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்வழி பதிவிட்டு ஆசிரியர்-மாணாக்கர் அனைவரும் பயன்பெறக் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறியீடு வழங்கப்பட உள்ளன. அதனையும் மேற்சொன்ன இணைய முகவரியையும் பள்ளிப்பொறுப்பாளர்களாகிய தாங்கள், தங்களது பள்ளி ஆசிரியர்-மாணாக்கரது பெற்றோருடன் பகிர்ந்து இணையவழி ஈடுபாட்டுக் கல்வியின் வாயிலாக மேலும் பயன்பெற கேட்டுக்கொள்ளவும். இம்மின்மடலைத் [...]
ATA Students Competition @ Virtual Convention-January 9-10th 2021
அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! வணக்கம், சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த மாணாக்கர் போட்டிகள் குறித்த விவரங்கள்-மீண்டும் நினைவூட்டுவதற்காக: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களது தமிழ்த் திறன், ஓவியத் திறன் மற்றும் மாறுவேடப் போட்டி ஆகியனவற்றை அறிய ஓர் அரிய வாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பணமுடிப்புப் பரிசுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியும் வயதுவரம்பிற்குட்பட்ட போட்டி ஒவ்வொன்றிற்கும் இருவர் வீதம் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.போட்டிகளில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. பள்ளிகளது வேண்டுகோளுக்கிணங்க பதிவுசெய்வதற்கான இறுதிநாள் டிசம்பர் 6-லிருந்து 13 ஞாயிற்றுக்கிழமைக்கு நீட்டிக்கப்படுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காது இருக்கும் பள்ளிகள்எதிர்வரும் டிசம்பர் 13 [...]
ATA Teachers Award @ Virtual Convention-January 9-10th 2021
அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர் விருது குறித்த விவரங்கள்: நல்லாசிரியர் விருது: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பல ஆண்டுகளாகப் பணிசெய்யும் ஆசிரியப்பெருமக்களுக்கு அவர்கள்தம் தமிழ்த் தன்னார்வச் சேவைதனைப் பாராட்டும் விதமாக சென்ற ஆண்டு நெடுநாள் ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில், பள்ளிதோறும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதன்மை ஆசிரியராகப் பணிசெய்யும் ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்க அ.த.க முனைந்துள்ளது. விவரங்கள் இதன் கீழ். Nomination for BEST Teacher Award (நல்லாசிரியர் விருது): Eligibility: Each school [...]
Thirukkural Essay Competition for High School Students
Tamil Sangam of Greater Washington, American Tamil Academy(ATA), and the Tamil Literary Study Circle of Greater Washington join together to conduct Thirukkural Essay Competition for High School Students in the United States of America. 1.Rules for the Competition This competition is limited to students in the USA studying in grades 9 through 12. Essays can be written either in English or in Tamil There is no limit to the number [...]
பயணம் – காலாண்டு இதழ் – VOL 1 ISSUE 1
ATA-PAYANAM-News-Letter-OCT 2020
Textbook Feedback
அன்புடை பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும், அ.த.க.வின் புதிய நிர்வாகக் குழுவினரின் அன்பு கலந்த வணக்கங்கள். வெற்றிகரகமாக 2019-20 கல்வியாண்டு முடிகிற இத்தருணத்தில் 2020-21ம் ஆண்டுக்கான நூற்களை அச்சிக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் எங்களது பாடநூல் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அச்சுக்குச் செல்லும் முன் உங்களுடைய சென்ற ஆண்டின் அனுபவத்திலிருந்து நூற்களைப் பற்றிய உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டால் அவற்றைப் புதிய நூற்களில் மாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும். சென்ற ஆண்டில் மாணவர்களோடு தாங்கள் இந்நூல்களைப் பயன்படுத்தியபோது பாடங்கள் பற்றிய கண்ணோட்டங்களை மாணாக்கர்கள் வழி பெற்றிருப்பீர்கள். அக்கருத்துகளில் குறிப்பானவை என்று நீங்கள் எண்ணுபவற்றைப் பகிர்ந்துகொண்டால் நல்லது. எந்த நூலில் எந்தப் பக்கத்தில் மாற்றம் [...]
New emails for ATA
அனைவருக்கும் வணக்கம், அ.த.க. வழக்கமாகப் பயன்படுத்திவந்த amtaac.org செயற்தளத்தை மிண்டும் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக,அதன்வாயிலாகத் பள்ளிகளைத் தொடர்புகொள்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதால்,தற்பொழுது,அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்திற்கென புதிய செயற்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான தளப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. […]
School Communication
School Communication Dear School admins: Vanakkam. ATA book store is open to accept book orders. Here’s the link. http://amtaacstore.org/ where schools can use their last year credential to login to the website. Please send your book order related support emails to orders@amtaac.org Thanks, Megalai Ezhilarasan அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்
School Communication
School Communication Dear School admins: Vanakkam. Hope everyone is having a great summer. On behalf of ATA Team, I am very pleased to welcome you all for another successful academic year 2019-20. School registration renewal: Please make a PayPal payment to “treasurer@amtaac.org” and enter your School Name in the notes. Please note: To order books in the store a life membership or current annual membership will be required. Book order: The book order for academic [...]
School Communication
School Communication பள்ளிப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம். உங்களில் பலர் விடுமுறையில் இருப்பீர்கள். சிலர் அடுத்த கல்வி ஆண்டிற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இருப்பீர்கள். அதே நேரத்தில், அ.த. க வில், புத்தகப்பணிகள் ஓய்வில்லாமல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் முன்னரே அறிவித்தபடி நமது பாடத்திட்டத்தை எளிமைப்படுத்தி திருத்தி அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இதில் எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது பல அமெரிக்க மற்றும் சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழக தமிழ்ப்பேராசிரியர்கள், கலை வல்லுநர்கள் மற்றும் பல தன்னார்வல ஆசிரியர்கள் என ஒரு மாபெரும் அணியே இணைந்து செயல்பட்டு வருகிறது. பணியாற்றும் அனைவரும், இரவு பகல் பாராது, வாரநாட்கள், வார இறுதி [...]